search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் தொல்லை குறித்து பெண்கள் ஆன்லைனில் புகார் செய்யும் வசதி: மேனகா காந்தி தொடங்கி வைத்தார்
    X

    பாலியல் தொல்லை குறித்து பெண்கள் ஆன்லைனில் புகார் செய்யும் வசதி: மேனகா காந்தி தொடங்கி வைத்தார்

    பாலியல் தொல்லை குறித்து பெண்கள் ஆன்லைனில் புகார் செய்யும் வசதியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி மேனகா காந்தி தொடங்கி வைத்தார்.
    புதுடெல்லி:

    10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்களில் பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க ‘உள்ளிருப்பு புகார்கள் குழு’ (ஐசிசி) அமைக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் புகார் தெரிவிக்க தயங்கும் பெண் தொழிலாளர்கள் ஆன்லைனிலேயே புகார் தெரிவிக்கும் வசதியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி மேனகா காந்தி தொடங்கியுள்ளார்.



    இந்த அமைச்சகத்தின் இணையதள பக்கத்தில் இதற்காகவே ‘ஷி-பாக்ஸ்’ (எஸ்.எச்.இ-பாக்ஸ்) என்ற ஒரு புகார் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் வரும் புகார்களை கவனிப்பதற்காகவே ஒரு குழுவினர் செயல்படுவார்கள். இதில் பெண்கள் செய்யும் புகார் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஐ.சி.சி. குழுவுக்கு அனுப்பப்படும். அந்த குழுவின் விசாரணை நிலை குறித்தும் கண்காணிக்கப்படும். ஏற்கனவே அரசு ஊழியர்களுக்காக இதுபோன்ற இணையதள பக்கம் தொடங்கப்பட்டது. இப்போது தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார்.
    Next Story
    ×