search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியுரிமையை நிரூபிக்குமாறு முன்னாள் ராணுவ வீரருக்கு நோட்டீஸ்: மீண்டும் ஒரு சம்பவம்
    X

    குடியுரிமையை நிரூபிக்குமாறு முன்னாள் ராணுவ வீரருக்கு நோட்டீஸ்: மீண்டும் ஒரு சம்பவம்

    ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி தற்போது ஓய்வில் இருக்கும் அசாம் மாநிலத்தை சேர்ந்த மஹிருதின் அகமது என்வர் தனது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    கவுகாத்தி:

    வங்காளதேசத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குடியேறியுள்ளனர். இவர்களில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை கணக்கிடும் அரசு அவர்களை மீள்குடியேற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், கடந்த மாதம் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது அஷ்மல் ஹொகி என்பவருக்கு வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தில் இருந்து குடியுரிமையை நிரூபிக்குமாறு நோட்டீஸ் வந்திருந்தது. ஆனால், அவர் இந்திய ராணுவத்தில் இணை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் முன்னாள் ராணுவ வீரருக்கு குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஹிருதின் அகமது என்பவர் ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி கடந்த 2004-ம் ஆண்டில் ஓய்வு பெற்றுள்ளார்.

    இந்நிலையில், 1971-ம் ஆண்டில் வங்காளதேசத்தில் இருந்து எவ்வித ஆவணங்களும் இல்லாமல் அவர் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக கருதுவதாகவும், இதன் காரணமாக அவர் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் எனவும் தீர்ப்பாயத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ‘1964-ம் ஆண்டில் அசாம் மாநிலம் பார்பேட்டா மாவட்டத்தில் தான் நான் பிறந்தேன். இந்தியன் இல்லாமல் இருந்தால் நான் எப்படி ராணுவத்தில் இணைந்திருக்க முடியும். ராணுவத்தில் பணியாற்றிய பின்னரும் நான் இழிவுபடுத்தப்படுவது மிகவும் வேதனையானது மற்றும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது’ என மஹிருதின் அகமது கூறியுள்ளார்.
    Next Story
    ×