search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவிலில் தங்கக்கொடிமரம், பலிபீடத்தை சுற்றி மழைநீர் தேங்கியது
    X

    திருப்பதி கோவிலில் தங்கக்கொடிமரம், பலிபீடத்தை சுற்றி மழைநீர் தேங்கியது

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கக்கொடி மரம், பலிபீடத்தைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியது. தீயணைப்புப்படை வீரர்கள் மோட்டார் மூலம் வெளியேற்றினர்.
    திருமலை:

    திருமலை, திருப்பதியில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும், சாமி தரிசனம் செய்து விட்டு கோவிலில் இருந்து வெளியே செல்லும் பக்தர்களும் கொட்டும் மழையில் நனைந்தபடி கடும் அவதிப்படுகிறார்கள்.

    கோவிலில் உள்ள தங்கக் கொடிமரம், பலிபீடத்தைச் சுற்றி மழைநீர் வெளியேறாமல் முழங்கால் அளவுக்கு தேங்கி கிடந்தது. தேங்கி கிடந்த மழைநீரில் பக்தர்கள் நடந்து சென்றனர். அதில், சிறு குழந்தைகளுடன் வந்த பெண் பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இதுபற்றி தேவஸ்தான அதிகாரிகள், திருமலை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும், தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து, ஏழுமலையான் கோவி லில் உள்ள தங்கக்கொடிமரம், பலிபீடத்தைச் சுற்றிலும் தேங்கி கிடந்த மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர்.

    திருமலை யில் இரவிலும், அதிகாலை யிலும் கடும் குளிராக இருப்ப தால் நடுங்கும் குளிரில் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள்.

    மேலும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் தரைதளம் குளிர்ந்து காணப்படுவதால், பக்தர்கள் அமர்ந்திருக்க, படுத்து உறங்க தார்ப்பாய் போடப்பட்டு உள்ளது. அங்கு, தங்க வைக்கப்படும் பக்தர்களுக்கு சூடாக பால், காபி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×