search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: ஆந்திர அமைச்சர்
    X

    திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: ஆந்திர அமைச்சர்

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜி.எஸ்.டியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த உள்ளதாக ஆந்திர நிதியமைச்சர் ராமகிருஷ்ணா கூறினார்.
    திருமலை:

    திருப்பதி கோவிலில் ஆந்திர நிதியமைச்சர் ராமகிருஷ்ணா தரிசனம் செய்தார். பின்னர் வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம், திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்துவ விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால் பிரசாதங்கள் மற்றும் சேவா டிக்கெட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.

    ஆனால் பிரசாதம் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட வாடகை அறைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.



    ஆந்திர மாநில சட்டப் பேரவை கூட்டத் தொடர்ந்து நடைபெற உள்ளதால் வரும் 9-ஆம் தேதி குவாஹாட்டில் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. அதனால், நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் அதில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் தேவஸ்தானத்துக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தற்போது விதித்து வரும் ஜி.எஸ்.டி. வரியையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்த அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

    மேலும் தேவஸ்தானம் தனி நிறுவனம் போல் செயல்பட்டு வருவதால் தேவஸ்தானத்துக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஆந்திர முதல்வரும் கோரிக்கை விடுத்துள்ளார் என்றார்.
    Next Story
    ×