search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே ஓட்டல் ஊழல் வழக்கு: 13-ம் தேதி நேரில் ஆஜராக தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
    X

    ரெயில்வே ஓட்டல் ஊழல் வழக்கு: 13-ம் தேதி நேரில் ஆஜராக தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

    ரெயில்வே ஓட்டல் ஊழல் வழக்கு விசாரணைக்காக பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் 13-ம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுபியுள்ளது.

    புதுடெல்லி:

    பீகார் முன்னாள் முதல்- மந்திரி லாலு பிரசாத் யாதவ். ராஷ்டிரிய ஜனதா தள தலைவரான இவர் 2004 முதல் 2009 வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார்.

    2006-ம் ஆண்டில் அவரது பதவிக் காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமாக பூரி மற்றும் ராஞ்சியில் இருந்த 2 ஓட்டல்கள் தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்திய ரெயில்வே மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) கட்டுப்பாட்டில் இருந்த இந்த இரண்டு ஓட்டல்களின் நிர்வாக உரிமை சுஜாதா ஓட்டல் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதற்கு லஞ்சமாக பீகாரில் 3 ஏக்கர் நிலத்தை பினாமி கம்பெனியில் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. கடந்த ஜூலை 7-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி ஆகியோர் ஆஜராக சி.பி.ஐ. ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் ஆஜராகாமல் அவகாசம் கேட்டு இருந்தனர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அக்டோபர் 5-ந்தேதி லாலு பிரசாத் யாதவும், 6-ந்தேதி தேஜஸ்வியும் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. புதிய தேதியை அறிவித்து உத்தரவிட்டது. அதன்படி, லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சி.பி.ஐ. தலைமையகத்தில் ஆஜராகி, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்திருந்தனர்.

    இந்நிலையில், வருகிற 13-ம் தேதி வழக்கு விசாரணைக்காக தேஜஸ்வி யாதவ் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
    Next Story
    ×