search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப்பைன்ஸில் மோடி - டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு
    X

    பிலிப்பைன்ஸில் மோடி - டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு

    பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்த மாதம் நடைபெற உள்ள கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமர் மோடி அங்கு டிரம்ப்பை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளன.
    புதுடெல்லி:

    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அடுத்த மாதம் 13-ம் தேதி கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மாநாடு நடைபெறும் நாளுக்கு முந்தைய தினம் வரை பிலிப்பைன்ஸில் இருக்கிறார்.

    இதனால், இந்திய பிரதமர் மோடியும், டிரம்ப்பும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாத இறுதியில் அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி ஜிம் மேட்டீஸ் மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருந்தனர்.

    சீனா - பாகிஸ்தான் இடையே உள்ள பட்டுச்சாலை திட்டம் மற்றும் தென் சீனக்கடலில் சீனாவின் ஆதிக்கம் போன்றவை மோடி, டிரம்ப் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு என சில விவகாரங்களும் இடம்பிடிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×