search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி என்பது கப்பார் சிங் டாக்ஸ்: மோடியை தாக்கும் ராகுல் காந்தி
    X

    ஜி.எஸ்.டி என்பது 'கப்பார் சிங் டாக்ஸ்': மோடியை தாக்கும் ராகுல் காந்தி

    பிரதமர் மோடி கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரி என்பது, கப்பார் சிங் டாக்ஸ் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
    அகமதாபாத்:

    பிரதமர் மோடி கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரி என்பது, கப்பார் சிங் டாக்ஸ் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேலைகளை ஆரம்பித்து நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், காந்தி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரி என்பது கப்பார் சிங் டாக்ஸ் என தாக்கியுள்ளார்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரி, கப்பார் சிங் வரியாக கடுமையாக உள்ளது. (கப்பார் சிங் என்பது ஷோலே பட வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.)

    பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தையே பிரதமர் மோடி சிதைத்து விட்டார். இதனால் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்ப்ட்டனர் என குற்றம் சாட்டினார்.

    குஜராத்தில் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி படிதார் இன தலைவர் ஹர்திக் படேல் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஹர்திக் படேலின் ஆதரவாளரான நரேந்திர படேல் நேற்று முன்தினம் பா.ஜ.க.வில் சேர்ந்தார். அதன்பின்னர், மாலை அவர் நிருபர்களை சந்திது, பா.ஜ.க.வில் இணைவதற்காக தனக்கு ரூ.1 கோடி பேசப்பட்டது. முன்பணமாக 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறுகையில், குஜராத் விலைமதிக்க முடியாதது. இதுவரை அதனை யாரும் வாங்கவில்லை. இனிமேலும் வாங்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×