search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் பண மதிப்பிழப்பு தொடர்பான பேரணிகள் நடத்தப்படும்: லாலு பிரசாத் யாதவ்
    X

    பீகாரில் பண மதிப்பிழப்பு தொடர்பான பேரணிகள் நடத்தப்படும்: லாலு பிரசாத் யாதவ்

    பிரதமர் மோடி அறிவித்த பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளது குறித்து நவம்பர் 8-ம் தேதி பீகாரில் பேரணிகள் நடத்தப்படும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். ஆனால் அவரது நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் பணம் மதிப்பிழப்பு தொடர்பாக நவம்பர் 8-ம் தேதி எங்கள் கட்சி சார்பில் பேரணிகள் நடத்தப்படும். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்ததனால் பொதுமக்கள் என்ன நன்மை அடைந்துள்ளனர் என்பதை பா.ஜ.க.வினர் தெரிவிக்க வேண்டும்.

    பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்காக மில்லியன் கணக்கில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். இதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் லாலு பிரசாத் யாதவ், மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் பீகாரில் விரைவில் மற்றொரு பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×