search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டின் செல்வத்துக்கு நுழைவாயில்களாக விளங்கும் துறைமுகங்கள்: பிரதமர் மோடி பேச்சு
    X

    நாட்டின் செல்வத்துக்கு நுழைவாயில்களாக விளங்கும் துறைமுகங்கள்: பிரதமர் மோடி பேச்சு

    நாட்டின் செல்வச் செழுமைக்கான நுழைவாயில்களாக துறைமுகங்கள் விளங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
    அகமதாபாத்:

    குஜராத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்காக பா.ஜ.க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி குஜராத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டு பவ்நகர் மற்றும் வதோதரா பகுதியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், எண்ணற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த மாதத்தில் 3-வது முறையாக குஜராத்துக்கு வந்துள்ள பிரதமர் மோடி ரூ.615 கோடி மதிப்பிலான படகு போக்குவரத்தினை தொடங்கி வைத்தார்.

    பவ்நகரில் உள்ள கோகா பகுதியில் இருந்து பரூச் நகரின் டஹேஜ் பகுதிக்கு இடையே செல்லும் இந்த படகில் பிரதமர் மோடி பயணம் செய்தார். பின்னர், டஹேஜ் பகுதியில் பொதுமக்களிடையே பேசிய பிரதமர் மோடி, ‘நாட்டின் செல்வச் செழுமைக்கான நுழைவாயில்களாக துறைமுகங்கள் விளங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    வெளிநாடுகளில் 30 சதவீத போக்குவரத்து நீர்வழி தடங்கள் மூலமாக நடைபெற்று வருகின்றன. 7500 கிலோமீட்டர் நீளத்துக்கு கடலோர பகுதியிலும், 14 ஆயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு ஆற்றுப் பகுதியிலும் என நமது நாட்டில் 21 ஆயிரம் கிலோமீட்டர் அளவுக்கு நீர்வழித்தடங்கள் உள்ளன. மத்தியில் முன்னர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது 6 நீர்வழி போக்குவரத்து மட்டுமே இருந்தது. தற்போது எங்கள் ஆட்சியில் நூற்றுக்கும் அதிகமான நீர்வழி போக்குவரத்தை அடையாளம் கண்டுள்ளோம்.

    சாலை வழியாக ஒரு டன் சரக்குகளை அனுப்ப ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு ரூபாய் ஐம்பது பைசா செலவாகின்றது. இதே சரக்கை ரெயில் மூலம் அனுப்ப ஒரு ரூபாய் ஆகும். ஆனால், நீர்வழிப் போக்குவரத்தின் மூலம் வெறும் 20 பைசா செலவில் அனுப்பலாம்.

    நாட்டின் முன்னேற்றத்துக்கு துறைமுகங்களை அதிநவீனப்படுத்த வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு அதிநவீன துறைமுகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனால் துறைமுகங்களை நவீனப்படுத்தும் புதிய தாரக மந்திரத்தை நாங்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். சாகர்மாலா திட்டத்தின் மூலம் பழைய துறைமுகங்கள் தரம் உயர்த்தப்படும் என தனது உரையில் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×