search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி: மண் அரிப்பு ஏற்படாமல் தொழில் நுட்பத்துடன் மலைப்பாதை சீரமைப்பு
    X

    திருப்பதி: மண் அரிப்பு ஏற்படாமல் தொழில் நுட்பத்துடன் மலைப்பாதை சீரமைப்பு

    திருப்பதியில் மண் அரிப்பு ஏற்படாமல் தொழில் நுட்பத்துடன் மலைப்பாதை சீரமைக்க உள்ளதாக ஐ.ஐ.டி.நிபுணர் குழு தகவல் தெரிவித்துள்ளனர்.

    திருமலை:

    திருப்பதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.

    இதனால், திருப்பதி மலைப்பாதைகளில் பல்வேறு இடங்களில் பெரிய பாறைகளும், சிறு சிறு கற்களும், மண்ணும் சரிந்து விழுந்தன. எனினும், போக்குவரத்துக்கும், பக்தர்களுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. மழையால், இரு மலைப்பாதைகளில் பிடிப்பு தன்மையற்ற பாறைகள், கற்கள் சரிந்ததாக தெரிய வந்துள்ளது.

    இரு மலைப்பாதைகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக புதுடெல்லி ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் பேராசிரியர் கே.எஸ்.ராவ் என்பவர் தனது குழுவினருடன் நேற்று திருமலைக்கு வந்தார். அவர் தனது குழுவினருடன், மலைப்பாதைகளுக்கு நேரில் சென்று பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில்:-


    திருப்பதி மலைப்பாதைகளில் மழை நேரத்தில் பாறைகள், கற்கள், மண் ஆகியவை சரிந்து விழாமல் இருக்க, அறிவியல் தொழில் நுட்பத்துடன் மலைப்பாதைகள் சீரமைக்கப்பட உள்ளது. அதற்கானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும், என்றார்.

    ஆய்வின்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான (பொறுப்பு) முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.சீனிவாசராஜு, என்ஜினீயர்கள் ராமச்சந்திராரெட்டி, சிவராம்பிரசாத், பிரசாத், சுரேந்திராரெட்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×