search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுஷ்மா சுவராஜுடன் பாகிஸ்தான் புதிய தூதர் சந்திப்பு
    X

    சுஷ்மா சுவராஜுடன் பாகிஸ்தான் புதிய தூதர் சந்திப்பு

    டெல்லியில் பாகிஸ்தானின் புதிய தூதராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட சோகைல் மெகமூத் முதன் முதலாக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் அண்டு முதல் இந்தியாவில் பாகிஸ்தான் தூதராக பணியாற்றி வந்த அப்துல் பாசித்தின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதராக சோகைல் மெகமூத்தை அந்த நாட்டு அரசு நியமித்தது. அவர் கடந்த மாதம் டெல்லியில் பாகிஸ்தானின் புதிய தூதராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

    சோகைல் மெகமூத் முதன் முதலாக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், புதிதாக நியமிக்கப்படும் வெளிநாட்டு தூதர்கள் மரியாதை நிமித்தமாக இதுபோன்று சந்தித்து பேசுவது வழக்கமான ஒன்றுதான் என்றும், குறிப்பிட்டு சொல்லும்படி அவர்கள் பேச்சுவார்த்தையில் எந்த முக்கிய பிரச்சினையும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தன.

    சுஷ்மா சுவராஜுடன் நடந்த பாகிஸ்தான் தூதரின் சந்திப்பு சுமுகமாகவும், ஆக்கபூர்வமாக அமைந்து இருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

    Next Story
    ×