search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீண்ட தூரம் செல்லும் 500 ரெயில்களின் பயண நேரம் குறைக்கப்படும்: இந்தியன் ரெயில்வே அறிவிப்பு
    X

    நீண்ட தூரம் செல்லும் 500 ரெயில்களின் பயண நேரம் குறைக்கப்படும்: இந்தியன் ரெயில்வே அறிவிப்பு

    நாட்டில் நீண்ட தூரம் செல்லும் 500 ரெயில்களின் பயண நேரம் சுமார் 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை குறைக்கப்படும் என இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ரெயில்வே மந்திரியாக பொறுப்பேற்ற பியூஷ் கோயல், நீண்ட தூரம் செல்லும் ரெயில்களின் பயண நேரம் விரைவில் குறைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அவரது உத்தரவின் பேரில் நீண்ட தூரம் செல்லும் ரெயில்களின் பயண நேரம் சுமார் 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே கால அட்டவணை நவம்பர் மாதம் வெளியிடப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், புதிய கால அட்டவணையின்படி இதுபோன்று 50 ரெயில்களில் வேகம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 51 ரெயில்களின் பயண நேரம் ஒரு மணி முதல் மூன்று மணி வரையில் உடனடியாக குறையும். மேலும், 500 ரெயில்கள் வரையில் இந்த பயண நேர குறைப்பு செல்லும்.

    போபால் - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் இனி 95 நிமிடங்கள் முன்னதாக சென்றடையும். கவுகாத்தி - இந்தூர் சிறப்பு ரெயிலும் 2,330 கி.மீ. பயணத்தை 115 நிமிடங்கள் முன்னதாக செல்லும். இதேபோல், 1929 கி.மீ. பயணிக்கும் காஜிப்பூர் - பாந்த்ரா டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் 95 நிமிடங்கள் முன்னதாகவே சென்றடையும் என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×