search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் இந்திய சிறுமி மாயம்: நடவடிக்கை எடுக்க தூதரக அதிகாரிகளுக்கு சுஷ்மா உத்தரவு
    X

    அமெரிக்காவில் இந்திய சிறுமி மாயம்: நடவடிக்கை எடுக்க தூதரக அதிகாரிகளுக்கு சுஷ்மா உத்தரவு

    அமெரிக்காவில் வசித்து வந்த 3 வயது இந்திய சிறுமி மாயமானது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் வசித்து வந்த 3 வயது இந்திய சிறுமி மாயமானது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
     
    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ஷெரின் மாத்யூஸ். இந்தியா வம்சாவளியை சேர்ந்த 3 வயது சிறுமியான இவர் வீட்டு வாசலில் இருந்தபோது மாயமானார். இதுதொடர்பாக அவரது வளர்ப்பு பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளி சிறுமி மாயமானது தொடர்பான தகவல் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு மாயமான சிறுமி விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இதுதொடர்பாக, சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் கூறுகையில், அமெரிக்காவில் இந்திய சிறுமி மாயமானது அறிந்து கவலை அடைந்துள்ளேன். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளேன். சிறுமி குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும் என அவர்களை கேட்டுக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×