search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்காவுக்காக ரேபரேலியை விட்டுக்கொடுக்கும் சோனியா
    X

    பிரியங்காவுக்காக ரேபரேலியை விட்டுக்கொடுக்கும் சோனியா

    காங்கிரசில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ள சோனியா காந்தி பிரியங்கா எம்.பி. தேர்தலில் நிற்பதற்கு வசதியாக தனது ரேபரேலி தொகுதியை விட்டுக் கொடுக்கிறார்.
    புதுடெல்லி:

    காங்கிரசில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். விரைவில் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பு ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்றதும் அவருக்கு உதவியாக பிரியங்காவும் அரசியலில் குதிப்பார் என்றும் கூறப்படுகிறது.

    இதற்காக அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக திட்டமிட்டுள்ளார். எம்.பி.யாகி காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது.



    பிரியங்கா எம்.பி. தேர்தலில் நிற்பதற்கு வசதியாக சோனியாகாந்தி தனது ரேபரேலி தொகுதியை விட்டுக் கொடுக்கிறார். சோனியாகாந்தி மேல்-சபை எம்.பி.யாகி பாராளுமன்றம் செல்கிறார். அவர் மேல்-சபைக்கு சென்றபிறகு கட்சிப் பணியில் இருந்து முற்றிலும் விலகி இருக்காமல் ஐக்கிய முற்போக்கு கூட் டணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மன்ற குழு தலைவராக தொடருவார் என்று கட்சியின் மேலிட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    நேரு குடும்பத்தில் மேல்-சபை எம்.பி.யாக இந்திரா காந்தி மட்டுமே இருந்தார். லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான மந்திரி சபையில் இடம் பெறுவதற்காக இந்திராகாந்தி 1964-ம் ஆண்டு மேல்-சபை எம்.பி.யானார். அவருக்குப் பின் சோனியாகாந்தி மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் சோனியா ரேபரேலி தொகுதி எம்.பி.யாவார். 1990-ம் ஆண்டு தனது கணவர் ராஜீவ்காந்தியின் அமேதி தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்.பி.யானார். அதன் பிறகு 2004-ம் ஆண்டு தனது மகன் ராகுல்காந்திக்கு அமேதி தொகுதியை சோனியா விட்டுக் கொடுத்தார். அவர் அருகில் உள்ள ரேபரேலிக்கு மாறினார். அதற்கு முன் இந்த தொகுதியில் இந்திராகாந்தி போட்டியிட்டு வந்தார்.

    Next Story
    ×