search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரப்பிரதேசம்: அரசு சார்பில் தீபாவளி கோலாகலம் - தீப ஒளியில் ஜொலித்த சரயு நதி
    X

    உத்தரப்பிரதேசம்: அரசு சார்பில் தீபாவளி கோலாகலம் - தீப ஒளியில் ஜொலித்த சரயு நதி

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு சார்பில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சரயு நதிக்கு தீப ஆராதனை காட்டி வழிபட்டார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு சார்பில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சரயு நதிக்கு தீப ஆராதனை காட்டி வழிபட்டார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். பெண்களை பாதுகாக்க ஆன்டி ரோமியோ படை, அரசு ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு என இவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதற்கிடையே, மாநில அரசு சார்பில் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என யோகி ஆதித்யநாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமான முறையில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது சரயு நதிக்கரை சுற்றிலும் சுமார் 2 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

    முன்னதாக ராமர், சீதை, லட்சுமணர் வேடம் அணிந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சிறப்பு பூஜை செய்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து பல்வேறு வண்ண மலர்கள் தூவப்பட்டன. மேலும், சரயு நதிக்கு தீப ஆராதனை காட்டி முதல் மந்திரி ஆதித்யநாத் வழிபாடு செய்தார். இதில் மாநில கவர்னர் ராம்நாயக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், மாநிலத்தில் ஏற்கனவே நடந்த ராவணன் ஆட்சி அகற்றப்பட்டு விட்டது. இப்போது ராமரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் அனைவரும் சமமாகவே கருதப்பட்டு வருகின்றனர். மின்சாரம் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×