search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசா வெடிவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல் மந்திரி நவீன் பட்நாயக்
    X

    ஒடிசா வெடிவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல் மந்திரி நவீன் பட்நாயக்

    ஒடிசா மாநிலத்தில் நடந்த வெடி விபத்துகளில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடந்த வெடி விபத்துகளில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

    ஒடிசா மாநிலத்தில் பலசோர் மாவட்டத்தில் உள்ள குன்டச்சக்கா கிராமத்தில் வீட்டில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்து வந்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதேபோல், பூரி மாவட்டத்திற்கு உட்பட்ட பிப்லி பகுதியில் நடந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் சிக்கி 6 வயது சிறுமியும், ரூர்கேலா நகர் பகுதியில் பட்டாசு கடையில் பிடித்த தீயில் சிக்கி ஒருவரும் உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் நடைபெற்ற வெடி விபத்தில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும். மேலும், வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×