search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.எஸ்.எஸ். தலைவர் படுகொலைக்கு ராகுல் காந்தி கண்டனம்
    X

    ஆர்.எஸ்.எஸ். தலைவர் படுகொலைக்கு ராகுல் காந்தி கண்டனம்

    பஞ்சாப் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலம், லூதியானா நகரில் உள்ள ககன்தீப் காலனியில் வசித்து வந்தவர் ரவீந்தர் கோசாய்(வயது 60). ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இவர், தினமும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஷாகா பயிற்சி வகுப்புக்கு செல்வது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் பயிற்சிக்கு சென்ற அவர் பயிற்சி முடிந்ததும் வீடு திரும்பினார்.

    கங்காதீப் காலனியை நெருங்கியபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், திடீரென வழிமறித்து அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவீந்தர் உயிரிழ்ந்தார்.

    கொடூரமான இந்த படுகொலைக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.  

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், லூதியானா நகரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொல்லப்பட்ட சம்பத்தை வன்மையாக கண்டிக்கிறேன். வன்முறை ஏற்புடையதல்ல, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×