search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: எல்லையோர கிராமங்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு - குழந்தை உள்பட 8 பேர் காயம்
    X

    காஷ்மீர்: எல்லையோர கிராமங்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு - குழந்தை உள்பட 8 பேர் காயம்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கோட்டின் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியின் மீது துபாக்கிகளால் சுட்டும் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
    ஸ்ரீநகர்:  

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கோட்டின் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியின் மீது துபாக்கிகளால் சுட்டும் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியவகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைகோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீதும், இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இங்குள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் எல்லையோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளின்மீது இன்று காலை 7.45 மணியில் இருந்து துப்பாகிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த 2 வயது குழந்தை உள்பட 3 பேரும் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தான் படைகள் மீது இந்திய வீரர்கள் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×