search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாஜ் மஹால் மட்டுமல்ல - பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகையையும் இடிக்க வேண்டும்: ஆசம் கான்
    X

    தாஜ் மஹால் மட்டுமல்ல - பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகையையும் இடிக்க வேண்டும்: ஆசம் கான்

    அடிமைச் சின்னமான தாஜ் மஹாலுடன் பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, டெல்லி செங்கோட்டை போன்றவற்றையும் இடிக்க வேண்டும் என உ.பி.முன்னாள் மந்திரி ஆசம் கான் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ் மஹாலை அடிமைச் சின்னம் என்று உத்தரப்பிரதேசம் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோம் பேசியது கடும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பி உள்ளது.

    துரோகிகளால் தாஜ் மஹால் கட்டப்பட்டு இருப்பதாகவும், அதை இந்திய வரலாற்று சின்னமாகவோ, நினைவு சின்னமாகவோ ஏற்க முடியாது, அது ஒரு அடிமை சின்னம் என்றும் எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கூறியிருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரசியல் தலைவர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    தாஜ் மஹாலை கட்டியது துரோகிகள் என்றால், டெல்லி செங்கோட்டையையும் துரோகிகள்தான் கட்டியுள்ளனர். அதனால் அங்கு தேசியக் கொடியை ஏற்றுவதை மோடி நிறுத்துவாரா? என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.

    அந்த வரிசையில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளரும் உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் மந்திரியும், சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கு பேர்போனவருமான ஆசம் கான், தனது காரசாரமான கருத்தை பதிவு செய்துள்ளார்.

    அடிமைச் சின்னங்கள் அனைத்தும் அழிக்கபட வேண்டும் என நான் எப்போதுமே கருதி வந்துள்ளேன். அவ்வகையில், தாஜ் மஹால் மட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை, செங்கோட்டை, பாராளுமன்ற கட்டிடம், குதுப் மினார் போன்றவையும் அடிமை சின்னங்கள் என்பதால், அவற்றையும் அழிக்க வேண்டும் என்று ஆசம் கான் தெரிவித்துள்ளார்.

    இப்படி ஆளாளுக்கு அடிமைச் சின்னங்கள் குறித்து பட்டியல் போட்டுக்கொண்டே சென்றால், இந்தியாவில் எந்த பாரம்பரிய சின்னங்களும் தப்பப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×