search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமாச்சல்: தேர்தல் நெருங்கும் நேரத்தில் பா.ஜ.க.வுக்கு தாவும் காங். மந்திரி
    X

    இமாச்சல்: தேர்தல் நெருங்கும் நேரத்தில் பா.ஜ.க.வுக்கு தாவும் காங். மந்திரி

    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசில் மந்திரியாக உள்ள அனில் ஷர்மா பா.ஜ.க.வில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    சிம்லா:

    இமாச்சலப்பிரதேச மாநில சட்டசபைக்கு நவம்பர் 8-ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசில் ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக உள்ள அனில் ஷர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாண்டியில் சமீபத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்ட பேரணியில் தனது தந்தை (முன்னாள் மத்திய மந்திரி சுக்ராம்) புறக்கணிக்கப்பட்டது வேதனையளிப்பதாக கூறினார்.

    மேலும், பா.ஜ.க தலைவர் அமித்ஷா உடன் தொடர்பில் இருப்பதாகவும் பரபரப்பை கிளப்பியுள்ளார். இதனால், விரைவில் அவர் பா.ஜ.க.வில் ஐக்கியமாகலாம் என தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இவரது தந்தை சுக்ராம் தொலைத்தொடர்பு முறைகேடு வழக்கு ஒன்றில் சிக்கியதும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அவரை கட்சியிலிருந்து சற்று விலக்கி வைத்திருந்தது.

    ஏற்கனவே, இதற்கு முன்னதாக அனில் ஷர்மா காங்கிரஸில் இருந்து விலகி பின்னர் 2004-ம் ஆண்டில் மீண்டும் அக்கட்சியிலேயே இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×