search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குர்தாஸ்பூர் லோக்சபை இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாஹர் முன்னிலை
    X

    குர்தாஸ்பூர் லோக்சபை இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாஹர் முன்னிலை

    பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாஹர் சுமார் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுனில் ஜாஹர் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார்.

    முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 14 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்ற அவர் தற்போது 1,08,230 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சலேரியா இரண்டாவது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

    இன்னும் சற்று நேரத்தில் வெற்றியாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×