search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப், அரியானாவில் பட்டாசு வெடிக்க 3 மணிநேரம் அனுமதி: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    பஞ்சாப், அரியானாவில் பட்டாசு வெடிக்க 3 மணிநேரம் அனுமதி: ஐகோர்ட்டு உத்தரவு

    பஞ்சாப், அரியானா மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச பகுதிகளில் 3 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
    சண்டிகர்:

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலப்பகுதிகளில் நவம்பர் 1-ந்தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து பட்டாசு விற்பனையாளர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்த போதும், மேற்படி தடையை நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

    இதைப்போல பஞ்சாப், அரியானா மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச பகுதிகளிலும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து சண்டிகர் ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதன்படி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை என, 3 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு வழங்கப்படும் தற்காலிக அனுமதி தொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிய நீதிபதிகள், இதில் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியிடப்படும் எனவும் கூறினர்.

    பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகின்றனரா? என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என போலீசாருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×