search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்: மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு
    X

    மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்: மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு

    தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    டெல்லியில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல்வேறு விதமான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்கு டெல்லி மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, மெட்ரோ ரெயில் விலை நிர்ணய குழு சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மெட்ரோ ரெயில்களில் டிக்கெட் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு அக்டோபர் மாதம் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரெயில் விலை நிர்ணய குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்கனவே அறிவித்த படி இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    கடந்த மே மாதம் மெட்ரோ ரெயில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ரயில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
    Next Story
    ×