search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்துலக நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க அருண் ஜெட்லி நாளை அமெரிக்கா பயணம்
    X

    அனைத்துலக நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க அருண் ஜெட்லி நாளை அமெரிக்கா பயணம்

    அனைத்துலக நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நிதி மந்திரி அருண் ஜெட்லி நாளை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    நிதி மந்திரி அருண் ஜெட்லி நாளை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நாளை அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்காவில் உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டங்களில் அருண் ஜெட்லி பங்கேற்க உள்ளார். ஒரு வாரத்துக்கு மேலாக அமெரிக்காவில் தங்கும் அருண் ஜெட்லி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    அமெரிக்காவில் முதல் நிகழ்ச்சியாக அக். 9-ம் தேதி நியூயார்க்கில் நடக்கவுள்ள முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார். அக். 10-ம் தேதி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றுகிறார்.

    அதைத்தொடர்ந்து, அக்டோபர் 12-ம் தேதி வாஷிங்டனில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் ஆண்டு கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

    இதுதவிர, இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளின் பொருளாதாரம் மற்றும் நிதி மந்திரிகளை தனித்தனியாக சந்தித்து, இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    அமெரிக்கா செல்லும் நிதி மந்திரி அருண் ஜெட்லியுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், பொருளாதார துறை செயலாளர் சுபாஷ் சந்திரா கர்க் மற்றும் மூத்த பொருளாதார துறை வல்லுநர் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவும் செல்கின்றனர் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×