search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசமான வானிலை காரணமாக நிர்மலா சீதாராமனின் டோக்லாம் பயணம் ரத்து
    X

    மோசமான வானிலை காரணமாக நிர்மலா சீதாராமனின் டோக்லாம் பயணம் ரத்து

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைப்பகுதியான நாது லாவுக்கு சென்றுள்ள பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கு ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
    காங்டோக்:

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைப்பகுதியான நாது லாவுக்கு சென்றுள்ள பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கு ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

    பாதுகாப்பு துறை மந்திரியாக சமீபத்தில் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் எல்லையோர பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிப்பது குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அதன்படி, சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலம் சென்ற அவர் ராணுவ உயரதிகாரிகள், அம்மாநில முதல்வர் மற்றும் கவர்னருடன் ஆலோசனைகள் நடத்தினார். மேலும், சியாச்சின் உச்சியில் உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று அங்குள்ள வீரர்களிடம் கலந்துரையாடினார்.

    இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா பகுதிக்கு நிர்மலா சீதாராமன் நேற்று பயணம் மேற்கொண்டார். சீன எல்லைக்கு மிக அருகில் இருக்கும் இப்பகுதிக்கு முதன் முறையாக அவர் வருகை தந்துள்ளார். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ - திபெத் எல்லைப்பாதுகாப்பு படை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதனையடுத்து, அங்குள்ள வீரர்களிடையே அவர் கலந்துரையாடினார். டோக்லாம் பகுதிக்கு நிர்மலா சீதாராமன் செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் சிக்கிம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×