search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரசுடன் கைகோர்க்க தயார்: இ.கம்யூனிஸ்ட் சூசக அறிவிப்பு
    X

    கேரளாவில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரசுடன் கைகோர்க்க தயார்: இ.கம்யூனிஸ்ட் சூசக அறிவிப்பு

    கேரள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரசுடன் கைகோர்க்க தயார் என அம்மாநில இ.கம்யூனிஸ்ட் செயலாளர் கன்னம் ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், கேரள மாநில இ.கம்யூனிஸ்ட் செயலாளர் கன்னம் ராஜேந்திரன் திருவனந்தபுரம் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஒரே நாடு - ஒரே வரி விதிப்பு என்ற ஜி.எஸ்.டி. கொள்கையால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறிய ராஜேந்திரன், இதே பாணியில் ஒரே நாடு - ஒரே மொழி. ஒரே நாடு - ஒரே மதம் போன்ற கொள்கைகளையும் மக்களிடம் திணிக்க பா.ஜ.க. முயன்று வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

    கேரளாவில் ‘லவ் ஜிஹாத்’ விவகாரத்தில் அரசு பாராமுகமாக இருப்பதாக அமித் ஷா கூறுவது இம்மாநிலத்தின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், பா.ஜ.க. நடத்திவரும் பாத யாத்திரை மக்களிடையே வகுப்புவாத பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என தெரிவித்தார்.

    சங் பரிவார் கொள்கைகளை கொண்ட சக்திகளுடனான இடதுசாரிகளின் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை இணைத்து கொள்வீர்களா? என்ற கேள்விகளுக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் கட்சி தீண்டத்தகாத கட்சி அல்ல என்று தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் இடது கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுக்குழுவில் இதுதொடர்பாக ஆய்வு செய்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    தற்போது மாநிலத்தை ஆளும் மா.கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி அரசில் இ.கம்யூனிஸ்ட் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×