search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில் உற்பத்தி துறையினருக்கு பல்வேறு சலுகைகள்: ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு
    X

    தொழில் உற்பத்தி துறையினருக்கு பல்வேறு சலுகைகள்: ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

    ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் பாதிக்கப்பட்ட தொழில் மற்றும் உற்பத்தி துறையினருக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி வெளியிட்டார்.
    புதுடெல்லி:

    கடந்த ஜூலை 1-ந்தேதி, நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து முடிவு செய்வதற்காக, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் அமைக்கப்பட்ட மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், நகை வாங்குபவர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்குவதற்கு பான் எண், ஆதார் எண் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு உருவாக்கி இருந்தது. இந்நிலையில், இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. அதனால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்குபவர்கள், இனிமேல் பான் எண்ணை தெரிவிக்க வேண்டியது இல்லை. அவர்களைப் பற்றிய விவரங்களை நகை வியாபாரிகள், நிதி புலனாய்வு பிரிவுக்கு அளிக்க வேண்டியதும் இல்லை.



    இதுபோல், ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நகை வியாபாரிகளை சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பான அறிவிக்கையையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது. ஒன்றரை கோடி ரூபாய்வரை வர்த்தகம் செய்யும் சிறு, குறு நிறுவனங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதும் என முடிவு எடுக்கப்பட்டது.

    ரூ.75 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மட்டுமே ‘காம்போசிசன்’ திட்டத்தின் கீழ் வரி செலுத்த முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், ரூ.1 கோடிவரை வர்த்தகம் செய்யும் சிறு, நடுத்தர நிறுவனங்களும் ‘காம்போசிசன்’ திட்டத்தில் வரி செலுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

    இத்திட்டத்தில் நடைமுறை சிக்கல் இல்லாமல், 1 முதல் 5 சதவீத வரி மட்டும் செலுத்தினால் போதும். பரவலாக பயன்படுத்தப்படும் 27 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியும் குறைக்கப்பட்டதாக அருண் ஜெட்லி தெரிவித்தார். 
    Next Story
    ×