search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தைக்கும் மகளும் உள்ள உறவை கொச்சைப்படுத்துவதா? சாமியாரின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் பேட்டி
    X

    தந்தைக்கும் மகளும் உள்ள உறவை கொச்சைப்படுத்துவதா? சாமியாரின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் பேட்டி

    தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவை கொச்சைப்படுத்துவதாக அரியானா சாமியாரின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் கூறியுள்ளார்.
    பஞ்சகுலா:

    தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு கற்பழிப்பு வழக்குகளில் 20 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் கடந்த மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

    இந்த வன்முறையில் 38-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக்களையும் பெருமளவில் சேதப்படுத்தினர்.

    இந்த கலவரம் தொடர்பாக அரியானா மாநில போலீசார் 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இவர்களில் குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத் இன்சான் முதலிடத்தில் இருந்தார். தலைமறைவாக இருந்த அவர் 39 நாட்களுக்குப் பிறகு நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கும் சாமியாருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் கூறப்பட்டது.

    கைது செய்யப்படுவதற்கு முன்னதாக ஹனி பிரீத் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள புனிதமான உறவை எப்படி இவ்வாறு கொச்சைப்படுத்த பேச முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வாறு கூறுவோரிடம் என்ன ஆதாரம் உள்ளது? அதுபோன்ற நபர்களை யாரும் நம்ப வேண்டாம்.

    ஆசிரமத்தில் எலும்புக்கூடுகள் இருந்ததாக கூறுவது தவறான தகவல். யாராவது அதனை பார்த்தார்களா? என் தந்தையைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. அவர் அப்பாவி. அதை நிரூபிக்கும் காலம் வரும். கோடிக்கணக்கான பெண்களும் சிறுமிகளும் என் தந்தையால் அதிகாரம் பெற்றுள்ளனர்.

    வன்முறையில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. மக்களை தூண்டிவிடும் வகையில் ஒரு வார்த்தையாவது நான் பேசியதை நீங்கள் கேட்டதுண்டா? நான் சட்டத்திற்கு பயந்து எங்கும் ஓடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவர் பேட்டி அளித்த சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×