search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன எல்லையில் படைவீரர்களுடன் தசரா கொண்டாடிய ராஜ்நாத்சிங்
    X

    சீன எல்லையில் படைவீரர்களுடன் தசரா கொண்டாடிய ராஜ்நாத்சிங்

    சீன எல்லையில் உள்ள பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தசரா பண்டிகையை கொண்டாடினார்.
    புதுடெல்லி:

    உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணத்தின் மூன்றாம் நாளில் இந்தியா-சீனா எல்லையான ரிம்கிம், ஜோஷிமத் மற்றும் சாமோலி மாவட்டத்தின் அவுலி பகுதிகளுக்கு  சென்றார்.
     
    ரிம்கிம் பகுதியில் அமைந்துள்ள இந்தோ திபெத் எல்லை போலீசார் முகாமுக்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்கு வீரர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். அங்கு நடைபெற்ற தசரா வழிபாட்டில் பங்கேற்ற அவர், வீரர்களுக்கு தசரா வாழ்த்துக்கள தெரிவித்தார். அப்போது அவருடன் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத்தும் சென்றார்.

    எல்லையில் போராடும் வீரர்களின் துணிச்சலை பாராட்டிய ராஜ்நாத் சிங், வீரர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பனியில் சென்று வரும் வகையில் பனி ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள், பனியை தாங்கும் வகையிலான ஆடைகள், தொடர்பு கொள்வதற்கு ஏற்ற வகையில் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

    மேலும், ஜோஷிமத்தில் படைவீரர்கள் நடத்திய ரத்ததான முகாமையும் பார்வையிட்டார்.
    Next Story
    ×