search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யஷ்வந்த் சின்ஹா அதிகாரத்துக்கு எதிராக உண்மையை பேசியிருக்கிறார் - ப.சிதம்பரம் பாராட்டு
    X

    யஷ்வந்த் சின்ஹா அதிகாரத்துக்கு எதிராக உண்மையை பேசியிருக்கிறார் - ப.சிதம்பரம் பாராட்டு

    இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சி குறித்து பிரதமர் மோடிக்கு எதிராக பேசிய பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி: 

    மத்திய முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் நான் பேசியாக வேண்டும் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அதில் பிரதமர் மோடியும், மோடியின் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் சேர்ந்து இந்திய பொருளாதாரத்தை சின்னாபின்னமாக்கிவிட்டனர் எனக் கூறியுள்ளார். மேலும் பாஜக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்த அரசுக்கு எதிராக போராட்டம் மற்றும் ரெய்டு நடத்தியிருக்கும் என்றும் கடுமையாக சாடியிருந்தார்.

    நாட்டின் பொருளாதாரம் மூழ்கிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தான் அங்கம் வகிக்கும் பாஜக அரசு குறித்து வெளிப்படையாக யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியிருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக டுவிட்டர் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் யஷ்வந்த் சின்ஹா அதிகாரத்துக்கு எதிராக உண்மையை பேசியிருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரம் மூழ்கிக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து சின்ஹா கூறியிருப்பதை குறிப்பிட்டு டிவிட்டியுள்ள ப.சிதம்பரம், மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்துவது ஒரு புதுமையான விளையாட்டு என தெரிவித்துள்ளார்.

    மேலும் பாஜக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் ரெய்டு நடத்த கோரியிருக்கும் என சின்ஹா கூறியதை குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம் உண்மை வெளிவரும் போது அதிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியாது என அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×