search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்: அமைச்சர் நிலோபர் கபில்
    X

    தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்: அமைச்சர் நிலோபர் கபில்

    தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம் என்று அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி சந்தோஷ்குமார் கங்வார் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை கூடுதல் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, மாவட்ட கலெக்டர்கள் கே.விவேகானந்தன் (தர்மபுரி), டி.ஜி.வினய் (திண்டுக்கல்), ரோகிணி (சேலம்), எம்.அசியா மரியம் (நாமக்கல்), ஏ.சிவஞானம் (விருதுநகர்), எஸ்.ஏ.ராமன் (வேலூர்) மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் நலத்திட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    மாநாட்டுக்கு பின்னர் அமைச்சர் நிலோபர் கபில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    இந்த மாநாட்டில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமலாக்க மேடை என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம். குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க ஜெயலலிதா பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    குழந்தை தொழிலாளர்களுக்கென 15 மாவட்டங்களில் சிறப்பு பள்ளிகளை அவர் உருவாக்கினார். அங்கு படித்த பல மாணவர்கள் தற்போது டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும் உள்ளனர்.

    தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். அதை முற்றிலும் இல்லாத நிலை ஆக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வறுமை காரணமாக குழந்தைகள் வேலைக்கு செல்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

    ஏனெனில் குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் முதல் அனைத்து கல்வி உபகரணங்களும் விலையின்றி வழங்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் பெற்றோருக்கு பாரமாக தெரியவில்லை. குழந்தைகள் கடத்தல் தமிழ்நாட்டில் பெரிதாக இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×