search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரிசா மாநிலத்தில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து - ரெயில் சேவை பாதிப்பு
    X

    ஒரிசா மாநிலத்தில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து - ரெயில் சேவை பாதிப்பு

    ஒரிசா மாநிலம் நெர்கண்டி அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல ரெயில்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
    புபனேஷ்வர்:

    ஒரிசா மாநிலம் நெர்கண்டி ரெயில் நிலையம் அருகே இன்று காலை சரக்குகளை ஏற்றி வந்துகொண்டிருந்த சரக்கு ரெயிலானது திடீரென தடம் புரண்டது. இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் ரெயிலின் 16 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி சரிந்தது.

    சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புக்குழுவினர் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தடம்புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தடம் வழியாக வரும் முக்கிய ரெயில்கள் தாமதமாகலாம் என்று தெரிகிறது.

    அதே போல இந்த வழியாக புறப்பட்டுச் செல்லும் ரெயில்களும் காலதாமதமாக புறப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக ரெயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×