search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷார்ஜா சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் விடுதலை: கேரளாவில் மன்னர் அறிவிப்பு
    X

    ஷார்ஜா சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் விடுதலை: கேரளாவில் மன்னர் அறிவிப்பு

    மூன்றாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த இந்திய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்ற ஷார்ஜா மன்னர் கொடுங்குற்றவாளிகள் அல்லாத கைதிகளை விடுதலை செய்வதாக தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ் பவனில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஷார்ஜா மன்னருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கவர்னர் சதாசிவத்திடம் இருந்து இந்த பட்டத்தை அவர் பெற்றுகொண்ட விழாவில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், சர்வதேச உறவுகள், கலை மற்றும் கல்வித்துறைக்கு ஆற்றிய சேவைக்காக இந்த பட்டம் அவருக்கு வழங்கப்பட்டதாக பட்டத்துடன் அளிக்கப்பட்ட பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, இன்று காலை ஷார்ஜா மன்னர் முதல் மந்திரி பினராயி விஜயனை அவரது வீட்டில் சந்தித்தபோதும் இதே கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார். மிக மோசமான குற்றங்கள் அல்லாத சிறிய குற்றங்களுக்காக மூன்றாண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து கேரளாவுக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு பதிலளித்த ஷார்ஜா மன்னர், அவர்களை ஏன் கேரளாவுக்கு அனுப்ப வேண்டும்? அவர்கள் ஷார்ஜாவிலேயே தங்கி வேலை செய்யலாம் என தெரிவித்ததாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

    பட்டமளிப்பு விழாவில் தனது ஏற்புரையின்போது இதற்கு பதிலளித்த ஷார்ஜா மன்னர், இந்தியர்கள் மட்டுமின்றி பிறநாடுகளை சேர்ந்தவர்களும் ஷார்ஜாவில் உள்ள சிறைகளில் உள்ளனர். கொடுங்குற்றங்கள் அல்லாத வாய்த் தகராறு உள்ளிட்ட சிறிய சண்டைகள் போன்ற குற்றச் செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
    Next Story
    ×