search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று பதவி இழந்த நீதிபதிகள்
    X

    மத்திய பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று பதவி இழந்த நீதிபதிகள்

    மத்திய பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து போபால் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் நீதித்துறையில் பணியாற்றுவோர்கள் இரண்டுக்கு மேல் பிள்ளை பெற்றால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் சட்டம் அமலில் உள்ளது.

    இந்த சட்டத்தின் கீழ் முதன் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஒருவர் குவாலியர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி மனோஜ்குமார், மற்றொருவர் கபல்பூர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி அஷ்ரப் அலி.

    இவர்கள் இருவரும் சட்டத்தை மீறி 3-வது பிள்ளை பெற்றனர். இதையடுத்து போபால் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தி இருவரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த தகவலை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் முகமத் பாகிம் அன்வர் வெளியிட்டுள்ளார்.

    பதவி இழந்த 2 நீதிபதிகளும் கடந்த ஆண்டு நீதிபதியாவதற்கு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×