search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாய்பாபா சமிதி நூற்றாண்டு விழாவை அக். 1-ம் தேதி ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்: சீரடி கோயில் நிர்வாகம்
    X

    சாய்பாபா சமிதி நூற்றாண்டு விழாவை அக். 1-ம் தேதி ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்: சீரடி கோயில் நிர்வாகம்

    மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா சமிதி நூற்றாண்டு விழாவை அக்டோபர் 1-ம் தேதி ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    சீரடி:

    மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா சமிதி நூற்றாண்டு விழாவை அக்டோபர் 1-ம் தேதி ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    மராட்டிய மாநிலம் சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு திரளான பக்தர்கள் வந்து சாய்பாபா அருள் பெற்று செல்வது வழக்கம். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

    இதற்கிடையே, சீரடி சாய்பாபா சமிதி தனது நூற்றாண்டை இந்த ஆண்டு கொண்டாட உள்ளது. நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    சாய்பாபா சமிதி மகோத்சவம் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காலை 11 மணிக்கு சீரடிக்கு வருகிறார். கோயிலின் முன்புறம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 51 அடி உயர கம்பத்தில் ஜனாதிபதி கொடியேற்றி வைக்கிறார்.

    மேலும், சீரடியின் அகமது நகரில் அமையவுள்ள விமான நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இதில் மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த மகோத்சவத்தில் பங்கேற்க வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து சுமார் 4.5 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். இதில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×