search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீடுகளில் ரூ.650 கோடி சிக்கியது
    X

    கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீடுகளில் ரூ.650 கோடி சிக்கியது

    கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீடுகளில் 4 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனையில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.650 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.
    பெங்களூர்:

    கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா. முன்னாள் மத்திய மந்திரியாகவும், கவர்னராகவும் பணியாற்றி உள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவராக நீண்ட காலமாக இருந்து வந்த எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் அதில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்.

    எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி.சித்தார்தா. தொழில் அதிபரான இவர் கேப் காபிடே நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

    இந்த நிலையில் சித்தார்த்துக்கு சொந்தமான வீடு, ஐ.டி. நிறுவனங்கள் உள்பட பல மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, பெங்களூர், மும்பை, சிக்மகளூர் உள்பட 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 21-ந்தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது கணக்கில் வராத சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.650 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.



    வருமான வரித்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். சோதனை குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×