search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவை தொடர்ந்து ரஷியா, சீனாவுக்கு ராகுல் செல்கிறார்
    X

    அமெரிக்காவை தொடர்ந்து ரஷியா, சீனாவுக்கு ராகுல் செல்கிறார்

    ராகுல்காந்தி அமெரிக்காவைக் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக ரஷியா, சீனா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இரு நாடுகளிலும் அவர் 8 முதல் 10 நாட்கள் வரை சுற்றுப்பயணம் செய்வார் என்று தெரிய வந்துள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 130 ஆண்டு பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் தலைவர் பதவியை ஏற்க திட்டமிட்டுள்ளார்.

    காங்கிரஸ் கடசிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் தோல்வி ஏற்பட்டு வருவதால் அதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    ராகுல் காந்திக்கு இந்தியாவில் சரியான இமேஜ் கிடைக்காமல் இருப்பது பெரும் குறையாக கருதப்படுகிறது. நேரு குடும்பத்துக்கு வாரிசு என்றாலும் அவர் முக்கிய விவாதங்களில் கலந்து கொள்ளாதது விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் உலக நாடுகளில் தன்னை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் ராகுல் இறங்கியுள்ளார்.

    அந்த திட்டப்படி கடந்த வாரம் அவர் அமெரிக்கா சென்றார். அங்கு பல்வேறு நகரங்களுக்கு சென்று இந்தியர்களை சந்தித்துப் பேசினார். ஆனால் அமெரிக்காவில் ஒரு கூட்டத்தில் அவர் பேசும்போது, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியும் உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்று பேசியது விமர்சனத்துக்குள்ளானது.

    இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக ரஷியா, சீனா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராகுல் முடிவு செய்துள்ளார். இரு நாடுகளிலும் அவர் 8 முதல் 10 நாட்கள் வரை சுற்றுப்பயணம் செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ரஷியா, சீனா சுற்றுப்பயணங்களை முடிக்க ராகுல் திட்டமிட்டுள்ளார்.

    வெளிநாடுகளில் கொள்கை ரீதியிலான பயணம் செய்வதன் மூலம் தனக்கு குஜராத் தேர்தலில் புதிய இமேஜை ஏற்படுத்த முடியும் என்று ராகுல் நினைப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×