search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்கலைக்கழக மாணவிகள் மீது போலீஸ் தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்
    X

    பல்கலைக்கழக மாணவிகள் மீது போலீஸ் தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்

    பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவிகள் மீது போலீசார் நடத்திய தடியடி தாக்குதலுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவிகள் மீது போலீசார் நடத்திய தடியடி தாக்குதலுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் அடிக்கடி நடந்து வரும் பெண்களை கேலி செய்யும் செயல்களால் (ஈவ் டீசிங்) கோபமடைந்த மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் கலைப்பிரிவு மாணவி ஒருவரை கேலி செய்தனர். அதைத் தொடர்ந்து மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது போராட்டம் நடத்திய மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    இந்நிலையில், பல்கலைக்கழக மாணவிகள் மீது போலீசார் நடத்திய தடியடி தாக்குதலுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், பா.ஜ.க.வினர் அறிவித்த, பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற திட்டத்தை பதிவிட்டிருந்தார். அத்துடன், பிரதமர் மோடி ஆட்சியில் பெண்கள் இப்படித்தான் பாதுகாக்கப்படுகின்றனர் எனக்கூறி, பல்கலைக்கழக மாணவிகளை போலீசார் தாக்கும் காட்சிகளையும் பதிவிட்டிருந்தார்.

    ஏற்கனவே, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்களில் ஒருவரான சரத் யாதவும் பல்கலைக்கழக மாணவிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×