search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துர்கா பூஜையில் சிறப்பாக பந்தல் அமைக்கும் 10 பேருக்கு சீனா செல்ல வாய்ப்பு
    X

    துர்கா பூஜையில் சிறப்பாக பந்தல் அமைக்கும் 10 பேருக்கு சீனா செல்ல வாய்ப்பு

    மேற்கு வங்காள மாநிலத்தில் துர்கா பூஜையையொட்டி சிறப்பான வகையில் பந்தல் அமைக்கும் பத்து பேரை சீனாவுக்கு இலவச சுற்றுலா அனுப்பி வைக்க இருப்பதாக சீன தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடக்கும் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    குறிப்பாக கொல்கத்தா நகரம் விழா கோலம் பூண்டிருக்கும். தனியாரால் இவ்விழாவையொட்டி பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இந்த பந்தலில் பாகுபலி படத்தில் இடம்பெற்ற மகிழ்மதி அரண்மனை போன்று 100 அடியில் அரண்மனை தோற்றம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இன்றைய அரசியல் சூழ்நிலை, பொழுது போக்கு போன்றவற்றை குறிக்கும் வகையிலும் அரங்குகள் இடம் பெற்று உள்ளன. குறிப்பாக பண மதிப்பு இழப்பால் மக்கள் பட்ட கஷ்டங்களை ஆதரிக்கும் வகையில் “பண மரம்” ஒன்று வைத்து உள்ளனர். அதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை தொங்கவிட்டு இருக்கிறார்கள். அதே போல் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்று சிலைகள் வைத்து உள்ளனர்.

    மேலும் பெண் சிசு கொலை தடுப்பு போன்ற விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பல பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இந்த ஆண்டு ஓவியங்கள் மற்றும் கலை பொருட்கள் பயன்படுத்தி, பாதுகாப்பாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சிறப்பான பந்தல் அமைக்கும் குழுக்களை சேர்ந்த பத்து ஒருங்கிணைப்பாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை இலவசமாக சீனாவுக்கு சுற்றுலா அனுப்பி வைக்க போவதாக கொல்கத்தாவில் உள்ள சீன தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டும் 6 குழுக்களை சேர்ந்த 13 பேர் சீனாவுக்கு குற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
    Next Story
    ×