search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மீண்டும் குடகு விடுதிக்கு திரும்பினார்
    X

    முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மீண்டும் குடகு விடுதிக்கு திரும்பினார்

    முன்ஜாமீன் மனு விசாரணைக்காக சென்னை சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மீண்டும் குடகு விடுதிக்கு திரும்பினார்.
    பெங்களூரு:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மட்டும் வேறு இடத்தில் தங்கி இருக்கிறார். வெற்றிவேல் சென்னையில் உள்ளார்.

    இதேபோல முன்ஜாமீன் மனு விசாரணைக்காக சென்னை சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மீண்டும் குடகு விடுதிக்கு திரும்பி விட்டார். மேலும் குடகு விடுதியில் தங்கி இருந்த பூந்தமல்லி ஏழுமலை தனது மாமனார் காரியத்திற்காக குடகு விடுதியில் இருந்து நேற்று முன்தினம் பூந்தமல்லி புறப்பட்டு சென்றார்.  நேற்று அவர் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    இதேபோல வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவுமான ஜெயந்தி பத்மநாபன் தனது 2 குழந்தைகளை கவனிப்பதற்காக குடியாத்தம் சென்றுள்ளார். மற்றவர்கள் தொடர்ந்து குடகு விடுதியில் தங்கி இருக்கிறார்கள்.
    அவர்களை சந்திக்க சென்ற தினகரன் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசினார். எம்.எல்.ஏக்கள் தேவைப்படும் நேரத்தில் ஊருக்கு சென்று வரலாம் என்றும் அறிவுரை கூறினார். வழக்கு முடியும் 4-ந்தேதி வரை விடுதியில் தங்கி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதை அவரது ஆதரவாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அக்டோபர் 4-ந்தேதி வரை விடுதியில் தங்கி இருக்க முடிவு செய்துள்ளனர். தினகரன் விடுதியில் இருந்து இன்று தமிழகத்துக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×