search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பைக்கு தாவூத் இப்ராகிம் மனைவி ரகசியமாக வந்து சென்றார்: கைதான தம்பி வாக்குமூலம்
    X

    மும்பைக்கு தாவூத் இப்ராகிம் மனைவி ரகசியமாக வந்து சென்றார்: கைதான தம்பி வாக்குமூலம்

    தாவூத் இப்ராகிமின் மனைவி மெகஜபின் ஷேக் என்ற ஜூபினா ஜரின் மும்பைக்கு ரகசியமாக வந்து சென்றதாக இப்ராகிம் தம்பி இக்பால் காஸ்கர் கூறினார்.
    மும்பை:

    பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிமை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.

    பாகிஸ்தான் அரசு மறைமுகமாக அடைக்கலம் கொடுத்து வருவதால் அவனை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    சமீபத்தில் தாவூத் இப்ராகிம் தம்பி இக்பால் காஸ்கர் மும்பை தானேயில் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.100 கோடி கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

    அப்போது அவரிடம் தாவூத் இப்ராகிம் இருப்பிடம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் 5 விலாசங்களில் மாறி மாறி தங்கி இருப்பதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து அளித்த வாக்குமூலத்தில் தாவூத் இப்ராகிமின் மனைவி மெகஜபின் ஷேக் என்ற ஜூபினா ஜரின் மும்பைக்கு ரகசியமாக வந்து சென்றதாக கூறினார்.

    ஜூபினா தனது தந்தை சலீம் காஷ்மீரியை சந்திப்பதற்காக மும்பைக்கு கடந்த 2016-ம் ஆண்டு வந்தார். மும்பையில் சலீம் காஷ்மீரி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்த பின்பு ரகசியமாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

    பாகிஸ்தானின் கராச்சியில் தாவூத் இப்ராகிம், அவரது சகோதரர் அனீஷ் இப்ராகிம், நெருங்கிய கூட்டாளி சோட்டா ‌ஷகீல் ஆகியோர் ஒரே இடத்தில் வசித்து வருவதாகவும், ஈத் பண்டிகையின் போது மும்பையில் உள்ள தனது குடும்பத்தினருடன் அனீஷ் டெலிபோனில் பேசுவது வழக்கம்.

    தாவூத் இப்ராகிம் நல்ல உடல் நலத்துடன் திடகாத்திரமாக இருப்பதாக குறிப்பிட்டார். எந்த நோயினாலும் அவர் பாதிக்கப்படவில்லை.

    இவ்வாறு இக்பால் தெரிவித்து இருக்கிறார்.
    Next Story
    ×