search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்துக்கு திரும்ப அனுமதி தாருங்கள்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனிடம் கெஞ்சல்
    X

    தமிழகத்துக்கு திரும்ப அனுமதி தாருங்கள்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனிடம் கெஞ்சல்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களை தமிழகத்துக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெங்களூரு:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி தவிர 16 பேர் கர்நாடக மாநிலம் குடகு விடுதியில் தங்கி உள்ளனர்.

    அவர்களுடன் எம்.எல்.ஏ.க்கள் கலைச் செல்வன், ரத்தினசபாபதி ஆகியோரும் தங்கி உள்ளனர்.இவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கி உள்ளனர். அனைவரும் தங்களை தமிழகம் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று நேற்று குடகு விடுதிக்கு வந்த அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் தினகரனிடம் கோரிக்கை விடுத்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வருகிற 4-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை இங்கு தங்கி இருங்கள் என்று அவர்களிடம் தினகரன் கூறியதாக தெரிகிறது. இது குறித்து தங்க செல்வனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அடைந்ததால்தான் தினகரன் உங்களை சந்திக்க வந்து உள்ளாரா என்று அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதில் அளித்து தங்க தமிழ்செல்வன் கூறியதாவது:-



    தினகரன் வராவிட்டால் ஏன் வரவில்லை என்று கேட்கிறீர்கள். வந்தால் இப்படி கேட்கிறீர்கள். இப்படி கேள்வி கேட்க உங்களுக்கு யாராவது சொல்லி கொடுத்து அனுப்பினார்களா? இவ்வாறு அவர் கூறினார். அதன் பிறகும் தினகரன் தொடர்பாக நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தங்க தமிழ்செல்வன் கோபம் அடையாமல் சிரித்து கொண்டே பதில் அளித்தார்.
    Next Story
    ×