search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபினி அணையில் சமர்ப்பண பூஜை செய்த முதல்-மந்திரி சித்தராமையா
    X

    கபினி அணையில் சமர்ப்பண பூஜை செய்த முதல்-மந்திரி சித்தராமையா

    முதல்-அமைச்சர் சித்தராமையா கபினி அணையில் நேற்று சமர்ப்பண பூஜை (பாகிணி) பூஜை செய்தார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் மற்றும் விவசாய பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    பெங்களூரு:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த தொடர் மழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது.கபினி அணையில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரத்து கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் சித்தராமையா கபினி அணையில் நேற்று சமர்ப்பண பூஜை (பாகிணி) பூஜை செய்தார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் மகாதேவப்பா மற்றும் விவசாய பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு பிறகு கபினி அணைக்கு சமர்ப்பண பூஜை செய்ததால் மைசூரு மாவட்ட விவசாயிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அப்போது முதல்- அமைச்சர் சித்தராமையா கூறியதாவது:- உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள காவிரி வழக்கில் கர்நாடகாவுக்கு நியாயம் கிடைக்கும். அதே வேளையில் கண்காணிப்பு குழுவையோ, மேலாண்மை வாரியத்தையோ அமைத்தால் அதனை கர்நாடக அரசு ஒரு போதும் ஏற்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முயற்சித்தால் கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று கர்நாடக நீர்வளத்துறை மத்திரி பாட்டீல் கூறினார்.

    Next Story
    ×