search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்வாய் சுவர் உடைப்புக்கு முதலைதான் காரணம் என்பார் நிதிஷ்: லாலு கிண்டல்
    X

    கால்வாய் சுவர் உடைப்புக்கு முதலைதான் காரணம் என்பார் நிதிஷ்: லாலு கிண்டல்

    பீகாரில் புதிதாக கட்டப்பட்ட கங்கை கால்வாய் சுவரின் ஒரு பகுதி உடைந்ததற்கு முதலைதான் காரணம் என்று முதல்வர் நிதிஷ் கூறுவார் என லாலு பிரசாத் யாதவ் கிண்டலாக தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் நீர்ப்பாசனத்திற்காக கங்கை கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கங்கை நீரை கொண்டு செல்வதற்காக ரூ.390 கோடி செலவில் புதிய கால்வாய் கட்டப்பட்டது.

    இதனை நேற்று முதல்-மந்திரி நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக இருந்தது. இதையொட்டி முதல் நாளில் கால்வாயில் நீர் நிரப்பும் பணி நடந்தது. 5 ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் கால்வாயில் விடப்பட்டது.

    அப்போது அழுத்தம் தாங்காமல் கால்வாய் சுவரின்  ஒரு பகுதி திடீர் என்று இடிந்து விழுந்தது.  காகல்கானில் ஏற்பட்ட இந்த உடைப்பு காரணமாக, கால்வாயில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறி அருகில் 3 கி.மீ. சுற்றளவுக்கு இருந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

    கால்வாய் கட்டுமானப் பணியில் ஊழல் நடந்து இருப்பதாக முன்னாள் துணை முதல்-மந்திரியும் லாலு பிரசாத் யாதவ் மகனுமான தேஜஸ்வி பிரதாப் புகார் கூறியிருக்கிறார்.


    இதுபற்றி லாலு பிரசாத் யாதவ் கூறும் போது, ‘கடந்த மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆற்றின் கரைகளை எலிகள் பலவீனப்படுத்தியதாக முதல்வர் நிதிஷ் குமார் கூறியிருந்தார். இப்போது கால்வாய் உடைந்ததற்கு முதலை காரணம் என்று சொல்வாரா?’ என கிண்டலாக தெரிவித்தார்.

    Next Story
    ×