search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குர்தாஸ்பூர் எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்: வினோத்கன்னா மனைவி பா.ஜனதா சார்பில் போட்டி?
    X

    குர்தாஸ்பூர் எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்: வினோத்கன்னா மனைவி பா.ஜனதா சார்பில் போட்டி?

    குர்தாஸ்பூர் எம்.பி. தொகுதியை காலி இடமாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்ததை தொடர்ந்து அந்த தொகுதி இடைத்தேர்தலில் வினோத்கன்னா மனைவி பாஜனதா சார்பில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    குர்தாஸ்பூர்:

    பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்த நடிகர் வினோத்கன்னா கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி மும்பையில் மரணம் அடைந்தார்.

    இதனால் குர்தாஸ்பூர் எம்.பி. தொகுதியை காலி இடமாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது. வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி குர்தாஸ்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

    இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. தற்போது வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது வேட்பாளரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவில் வேட்பாளராக நிறுத்த வினோத்கன்னா மனைவி கவிதா கன்னா, தொழில் அதிபர் ஸ்வரண்சிங் சவாரியா, முன்னாள் மந்திரி மோகன் லால், முன்னாள் மாநில தலைவரும், பதன்கோட் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான அஸ்வினி சர்மா, முன்னாள் ஜலந்தர் எம்.எல்.ஏ. மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்.பி. அவினாஷ்ராய் கன்னா ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது.

    இதில் கவிதா கன்னா, ஸ்வரண்சிங் சவாரியா ஆகியோரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த யோகா குருக்களான பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் சிபாரிசு செய்துள்ளனர். எனவே இவர்கள் இருவரில் கவிதாகன்னாவுக்கு வேட்பாளராக நிறுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

    குர்தாஸ்பூர் தொகுதியில் 2009 பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளர் வினோத் கன்னா காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப்சிங் பாஜ்வாவிடம் தோல்வி அடைந்தார். அதன்பிறகு 2014 பாராளுமன்ற தேர்தலில் வினோத்கன்னா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    குர்தாஸ்பூர் தற்போது காங்கிரஸ் வேட்பாளராக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×