search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு-காஷ்மீர்: நவராத்திரியை முன்னிட்டு வைஷ்ணவி தேவி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
    X

    ஜம்மு-காஷ்மீர்: நவராத்திரியை முன்னிட்டு வைஷ்ணவி தேவி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலில் நவராத்திரி தொடங்கியதை முன்னிட்டு பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரெசாய் மாவட்டத்தின் கத்ரா என்ற ஊரின் அருகாமையில் அமைந்துள்ளது வைஷ்ணவ தேவி குகைக்கோவில். இந்த கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக் கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும், சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாகவும்  இந்த கோவில் விளங்கி வருகின்றது.

    வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத் தலங்களில் இதுவும் ஒன்று. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5.200 அடிகள் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அருள் தரும் அம்மனுக்கு உகந்த பண்டிகையான நவராத்திரி விழா இன்று தொடங்கி அடுத்த 9 தினங்களுக்கு நடைபெறும். நவராத்திரி விழாவை முன்னிட்டு வைஷ்ணவி தேவி கோவிலுக்கு இன்று காலை முதலே திரளான பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ஜம்மு காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. நவராத்திரி தொடங்கியதை முன்னிட்டு பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×