search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில், பாசன திட்டத்துக்கான கால்வாய் தடுப்புச்சுவர் உடைந்து கிராமங்களுக்குள் நீர் புகுந்தது: விசாரணைக்கு அரசு உத்தரவு
    X

    பீகாரில், பாசன திட்டத்துக்கான கால்வாய் தடுப்புச்சுவர் உடைந்து கிராமங்களுக்குள் நீர் புகுந்தது: விசாரணைக்கு அரசு உத்தரவு

    பீகாரில் பாசன திட்டத்துக்கான கால்வாய் தடுப்புச்சுவர் உடைந்து கிராமங்களுக்குள் நீர் புகுந்தது தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கும் உத்தரவிட்டது.
    பாட்னா:

    பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே ரூ.389 கோடி செலவில் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களின் பாசன பகுதிகள் பயன்பெறும் விதமாக அமைக்கப்பட்டுள்ள 11 கி.மீ. நீள பதேஸ்வர்ஸ்தான் கங்கை நீரேற்று கால்வாய் திட்டத்தை முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று திறந்து வைப்பதாக இருந்தது.

    இந்த திட்டத்தின் முன்னோட்ட சோதனையாக நேற்று முன்தினம் மாலை நீரேற்று நிலையத்தின் பம்ப் இயக்கப்பட்டது. அப்போது இழுக்கப்பட்ட நீரின் வேகத்தால் கால்வாயின் தடுப்புச்சுவரின் ஒரு பகுதி உடைந்தது. இதனால் பெருக்கெடுத்து ஓடிய நீர் அருகில் இருந்த பல கிராமங்களை சூழ்ந்தது.



    இதையடுத்து, நிதிஷ்குமார் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கால்வாய் தடுப்புச்சுவர் உடைந்தது குறித்து மாநில அரசு விசாரணைக்கும் உத்தரவிட்டது. நீர்வளத்துறை அதிகாரிகளின் கவனக்குறைவே இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டிய மாநில முதன்மைச் செயலாளர் அருண்குமார், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கால்வாய் தடுப்புச்சுவர் உடைந்து தண்ணீர் கிராமங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்பட்டு இருப்பதால் மாநில நீர்வள மந்திரி பதவி விலகவேண்டும், இதில் பெரும் ஊழல் நடந்து இருக்கிறது என்று லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம் குற்றம்சாட்டி உள்ளது.

    Next Story
    ×