search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துர்கா பூஜை: கொல்கத்தாவில் 1.4 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலையில் ரங்கோலி கோலம்
    X

    துர்கா பூஜை: கொல்கத்தாவில் 1.4 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலையில் ரங்கோலி கோலம்

    வடநாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற துர்கா பூஜை திருவிழாவையொட்டி கொல்கத்தா நகரை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 1.4 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலையில் ரங்கோலி கோலம் வரைந்து சாதனை படைத்துள்ளனர்.
    கொல்கத்தா:

    வடநாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற துர்கா பூஜை திருவிழாவையொட்டி கொல்கத்தா நகரை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 1.4 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலையில் ரங்கோலி கோலம் வரைந்து சாதனை படைத்துள்ளனர்.

    தெற்கு கொல்கத்தாவில் உள்ள லேக் ரோடு பகுதியில் கலைக் கல்லூரி மாணவிகள் சுமார் 350 பேர் வரைந்துள்ள இந்த கண்கவர் கோலம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேற்கு வங்காளத்தின் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான டெரெக் ஓ பிரெயன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த காட்சிகளை பதிவு செய்து மாணவிகளை பாராட்டியுள்ளார்.

    சரத் போஸ் சாலையில் நேற்று காலை தொடங்கி விவேகானந்தர் பூங்காவில் முடிவடைந்த இந்த கோலம் புதிய சாதனையாக கருதப்படுகிறது.
    Next Story
    ×