search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு குறித்த கோரிக்கைக்கு ஆஜராக கூடாது: மூத்த வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு
    X

    வழக்கு குறித்த கோரிக்கைக்கு ஆஜராக கூடாது: மூத்த வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு

    வழக்கு குறித்த கோரிக்கைக்கு ஆஜராக கூடாது என்று மூத்த வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று கட்டுப்பாடு விதித்துள்ளது.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் அமித்வாராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒரு வழக்கை விசாரித்தது.

    அப்போது அவசர விசாரணைக்காக சீனியர் வக்கீல்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஜூனியர் வக்கீல்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. சில வக்கீல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கூச்சல்- குழப்பம் ஏற்பட்டது. இதனால் நீதிபதிகள் எரிச்சல் அடைந்தனர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக மூத்த வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று கட்டுப்பாடு விதித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் கூறியதாவது:-

    வழக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வக்கீல்கள் மட்டுமே நீதிபதிகள் அமர்வு முன்பு கோரிக்கையை வைக்க வேண்டும். வழக்கு குறித்த கோரிக்கைகளை முன் வைக்க மூத்த வக்கீல்கள் ஆஜராக கூடாது. மூத்த வக்கீல்களுடன் அதிக நபர்கள் வருவதால் கோர்ட்டு வளாகத்துக்குள் கூச்சல்- குழப்பம் நிலவுகிறது என்று கூறியுள்ளனர்.

    Next Story
    ×