search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் புதிதாக திறக்கப்பட இருந்த அணையில் திடீர் உடைப்பு: முதல் மந்திரி வருகை ரத்து
    X

    பீகாரில் புதிதாக திறக்கப்பட இருந்த அணையில் திடீர் உடைப்பு: முதல் மந்திரி வருகை ரத்து

    பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் புதிதாக திறக்கப்பட்ட அணையின் ஒரு பகுதி திடீரென உடைந்தது. இதனால் முதல் மந்திரி நிதிஷ்குமர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலம் பாகல்பூரில் சுற்றுவட்டார கிராமங்கள் விவசாயத்துக்காக நீரை பெறவும், நீர் மின்சாரம் தயாரிக்கும் வகையிலும் சுமார் 389 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்த்தேக்க அணை கட்டப்பட்டு வந்தது. இந்த அணையின் திறப்பு விழா இன்று நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே, பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததுள்ளது.

    இந்நிலையில், பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாகல்பூரின் அருகில் உள்ள கஹல்கான் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அணையின் ஒரு பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சுற்றிலும் வெள்ள நீர் ஆறாக ஓடியது.

    இதைதொடர்ந்து, அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அணை உடைப்பால் மேலும் பாதிப்பு வராமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அணையில் உடைப்பு ஏற்பட்டதால் முதல் மந்திரி நிதிஷ்குமார் வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×